🏺 கலையரசன் ரா · அலகு 4

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Term 1 · அலகு 4 · 47 வினா & விடை

Term 1
47 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 1) பாடப்புத்தகத்தின் "தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 47 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

கோவலன், கண்ணகி பிறந்த ஊர் எது?

✅ விடை
பூம்புகார்
2

பூம்புகார் வணிக ரீதியாக எத்தகைய நகரம்?

✅ விடை
துறைமுக நகரம்
3

பூம்புகார் எங்குள்ளது?

✅ விடை
வங்காள விரிகுடாவில் காவிரி கலக்கும் இடத்தல் (தற்போதைய மயிலாடுதுறை அருகே)
4

பூம்புகாரின் வேறு பெயர்கள் என்ன?

✅ விடை
புகார், காவிரி பூம்பட்டினம்
5

பூம்புகார் யாருடைய துறைமுகம்?

✅ விடை
சோழர்கள்
6

பூம்புகார் துறைமுகத்தில் நடைபெற்ற வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் எவை?

✅ விடை
பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை
7

சிலப்பதிகாரத்தின் நாயகன், நாயகி யார்?

✅ விடை
கோவலன், கண்ணகி
8

கோவலனின் தந்தை யார்?

✅ விடை
மாசாத்துவான் (பெருவணிகன்)
9

கண்ணகியின் தந்தை யார்?

✅ விடை
மாநாய்கன் (பெருங்கடல் வணிகன்)
10

பூம்புகார் நகரத்து வணிகர்கள் பொருளை அதிக விலைக்கு விற்பதை தவறான செயல் என கருதினர் - பட்டினப்பாலை

11

பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?

✅ விடை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் (பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு)
12

பூம்புகாரில் இறக்குமதியான பொருட்கள் எவை?

✅ விடை
* தங்கம் - வடமலையிலிருந்து * சந்தனம் - மேற்கு தொடர்ச்சி மலை * முத்து - தென்கடல் பகுதி * பவளம் கிழக்கு பகுதி * உணவு பொருட்கள் - ஈழம் * மேலும் கருமிளகு, தரைவழியிலும், குதிரை கடல்வழியிலும் இறக்குமதி ஆனது.
13

பூம்புகார் எந்த காலம் வரை சிறப்புற்று விளங்கியது?

✅ விடை
பொ.ஆ. 200 வரை
14

சங்கம் வளர்த்த நகரம் எது?

✅ விடை
மதுரை
15

மதுரைக்கு அருகே அகழ்வாய்வு நடைபெறும் இடம் எது?

✅ விடை
கீழடி
16

கடைச்சங்க காலத்தில் தமிழ்ப்பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?

✅ விடை
49 பேர்
17

பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை எங்கிருந்து இறக்குமதி செய்தார்?

✅ விடை
உவரி (தூத்துக்குடி மாவட்டம்)
18

உவரி எங்கே உள்ளது?

✅ விடை
கொற்கைக்கு அருகில்
19

பாண்டியர்களின் துறைமுகம் எது?

✅ விடை
கொற்கை
20

பண்டைய தமிழகத்தில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கிருந்தது?

✅ விடை
மதுரை
21

மதுரையைப் பற்றிய குறிப்புகள் யாருடைய நூல்களில் காணப்படுகிறது?

✅ விடை
கிரேக்க வரலாற்றறிஞர் மெகஸ்தனிஸ், சாணக்கியர்
22

நாளங்காடி, அல்லங்காடி என்றால் என்ன?

✅ விடை
நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி (நாள் -பகல்), அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி (அல் - இரவு)
23

நாளங்காடி, அல்லங்காடி எங்கு இருந்தது?

✅ விடை
மதுரை
24

மதுரை தூங்காநகரம் என அழைக்கப்பட காரணம் என்ன?

✅ விடை
இரவு - பகல் வேறுபாடு இன்றி எப்பொழுதும் உயிர்ப்புள்ள நகரமாக விளங்குதால்
25

இரவு நேரத்தில் பெண்கள் அல்லங்காடியில் பொருள் வாங்கி செல்லும் அளவுக்கு பாதுகாப்பாக இருந்த நகரம் எது?

✅ விடை
மதுரை
26

எந்த நகரை சுற்றியுள்ள அகழியில் யானைகள் செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப்பாதைகள் இருந்தன?

✅ விடை
மதுரை
27

தமிழகத்தில் பண்டைய காலத்தில் பள்ளிகள் முதன் முதலில் ஏராளமான அமைக்கப்பட்ட நகரம் எது?

✅ விடை
காஞ்சி
28

காஞ்சிக்கு கூடுதல் படிப்பு படிக்க வந்த சீனப்பயணி யார்?

✅ விடை
யுவான் சுவாங்
29

நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் யார்?

✅ விடை
காளிதாசர்
30

கல்வியில் கரையிலாத காஞ்சி எனப் புகழ்ந்தவர் யார்?

✅ விடை
திருநாவுக்கரசர்
31

புத்தயா, சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று கூறியவர்?

✅ விடை
யுவான் சுவாங்
32

தொண்டை நாட்டில் பழமையான நகரம் எது?

✅ விடை
காஞ்சி
33

காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் சிலர் பெயர்களை கூறு?

✅ விடை
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர்
34

கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் ஊர் எது?

✅ விடை
காஞ்சி
35

கைலாசநாதர் கோயில் எங்கு உள்ளது?

✅ விடை
காஞ்சி
36

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?

✅ விடை
பல்லவமன்னன் ராஜசிம்மன்
37

பௌத்த மதறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?

✅ விடை
காஞ்சியில்
38

ஏரிகளின் மாவட்டம் எது?

✅ விடை
காஞ்சிபுரம்
39

துறைமுக நகரம் எது?

✅ விடை
புகார்
40

வணிக நகரம் எது?

✅ விடை
மதுரை
41

கல்வி நகரம் எது?

✅ விடை
காஞ்சி
42

பண்டைய தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் பழமொழியை கூறுக?

✅ விடை
சேரநாடு - வேழமுடைத்து (யானை) * சோழநாடு - சோறுடைத்து * பாண்டியநாடு - முத்துடைத்து * தொண்டைநாடு - சான்றோருடைத்து
43

சேரநாடு தற்போது எந்தப்பகுதிகளை குறிக்கும்?

✅ விடை
கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி, கேரள பகுதிகள்
44

சோழ நாடு தற்போது எந்தப் பகுதிகளை குறிக்கும்?

✅ விடை
தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை
45

பாண்டிய நாடு தற்போது எந்தப் பகுதிகளை குறிக்கும்?

✅ விடை
மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
46

தொண்டைநாடு தற்போது எந்தப்பகுதிகளை குறிக்கும்?

✅ விடை
காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி
47

நீர்மேலாண்மைக்கு சிறந்த சான்றாக இருந்த நகரம் எது?

✅ விடை
காஞ்சி

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 1 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ