🏺 கலையரசன் ரா · அலகு 2

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Term 1 · அலகு 2 · 25 வினா & விடை

Term 1
25 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 1) பாடப்புத்தகத்தின் "மனிதர்களின் பரிணாம வளர்ச்சி" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 25 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையை தெரிந்து கொள்ள உதவும் துறைகள் எவை?

✅ விடை
தொல்லியல், மானுடவியல்
2

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிக்கும் துறை எது?

✅ விடை
தொல்லியல்
3

மனிதனின் வளர்ச்சியைப் பற்றி படிக்கும் துறை எது?

✅ விடை
மானுடவியல் (Anthropology)
4

மானுடவியல் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?

✅ விடை
கிரேக்கம்
5

Anthropology என்பது எந்த இரு வார்த்தைகளில் சேர்க்கை?

✅ விடை
Anthropos - மனிதன், logos - எண்ணங்கள் (அ) காரணம்
6

தொடக்க கால மனிதன் எங்கு தோன்றினான்?

✅ விடை
கிழக்கு ஆப்பிரிக்கா
7

மனிதனின் பரிணாம வளர்ச்சி நிலைகளின் காலம்?

✅ விடை
1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் 4 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 2. ஹோமோ ஹெபிலிஸ் 2.3 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 3. ஹோமோ எரக்டஸ் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 4. நியாண்டர்தால் 130000 - 40000 ஆண்டுகளுக்கு முன் 5. ஹோமோ சேப்பியன்ஸ் 30000 ஆண்டுகளுக்கு முன் 6. குரோமேக்னான்ஸ் 50000 ஆண்டுகளுக்கு முன் (ஆப்பிரிக்காவில்), 40000 ஆண்டுகளுக்கு முன் (மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஐரோப்பாவில்)
8

பரிணாம நிலையில் நெருப்பின் பயனை அறிந்திருந்த மனிதன் யார்?

✅ விடை
ஹோமோ எரக்டஸ்
9

ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு காணப்பட்டு, இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் பெற்று விளங்கியவர்கள் யார்?

✅ விடை
நியாண்டர்தால்
10

நியாண்டர்தால் மனிதர்களின் சான்றுகள் எங்கு கிடைக்கப்பெற்றுள்ளன?

✅ விடை
ஜெர்மனி.
11

ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறியவர்கள் யார்?

✅ விடை
ஹோமோ சேப்பியன்ஸ்
12

ஹோமோ சேப்பியன்ஸ் எத்தகைய மனிதர்களாக கருதப்படுகிறார்கள்?

✅ விடை
சுமையாக சிந்திக்கும் மனிதன்
13

குரோமேக்னான்ஸ் எத்தகைய மனிதர்களாக கருதப்படுகிறார்கள்?

✅ விடை
நவீன மனிதன்
14

குரோமேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?

✅ விடை
பிரான்சில் உள்ள லாஸ்காஸ் எனுமிடத்தில் உள்ள குகை
15

மானுடவியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா - தான்சானியாவில் கல் படுகைகளில் பதிந்திருந்த மனித காலடித்தடங்களை எங்கு கண்டறிந்தனர்?

✅ விடை
கிழக்கு ஆப்பிரிக்கா - தான்சானியா
16

கதிரியக்க கார்பன் பகுப்பாய்வின்படி தான்சானியாவில் கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?

✅ விடை
3.5 மில்லியன் ஆண்டுகள்
17

ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் எவை?

✅ விடை
1. ஆஸ்ட்ரோலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா 2. ஹோமோ ஹெபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா 3. ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா, ஆசியா 4. நியாண்டர்தால் - யூரேசியா (ஐரோப்பா, ஆசியா) 5. குரோமேக்னான்ஸ் - பிரான்ஸ் 6. பீகிங் மனிதன் - சீனா 7. ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா 8. ஹைடல்பர்க் மனிதன் - லண்டன்
18

ஹோமோ சேப்பியன்ஸ் ஒரு குழுவில் எத்தனை பேர் இருந்தனர்?

✅ விடை
30 முதல் 40 பேர்
19

பண்டைய கால மனிதர்களின் வேட்டையாடும் முறைகள் எவை?

✅ விடை
1. குழுவாக சென்று வேட்டையாடுதல் 2. குழிதோண்டி அதில் விலங்குகளை சிக்க வைத்து வேட்டையாடுதல்
20

ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மைத் தொழில் எது?

✅ விடை
வேட்டையாடுதல்
21

ஆதிகாலத்தில் ஆயுதங்கள் செய்ய ஏற்றதாக இருந்தது எது?

✅ விடை
சிக்கிமுக்கி கல்
22

ஆதிகாலத்தில் மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்த கல்லை பயன்படுத்தினர்?

✅ விடை
சிக்கிமுக்கி கல்
23

தற்போதும் தீப்பெட்டியே பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் யாரிடையே காணப்படுகிறது?

✅ விடை
நீலகிரி மாவட்டத்தில் சில கிராமங்களில்
24

மனித வரலாற்றில் முதல் தரமான கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது?

✅ விடை
சக்கரம் உருவாக்கம்
25

தமிழ்நாட்டில் தொல் பழங்கால பாறை ஓவியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றன.

✅ விடை
1. விழுப்புரம் - கீழ்வலை 2. மதுரை - உசிலம்பட்டி 3. கோவை - குமுதிபதி, மாவடைப்பு 4. நீலகிரி - பொறிவரை, கரிக்கையூர்

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 1 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ