🏺 கலையரசன் ரா · அலகு 1

வரலாறு என்றால் என்ன?

Term 1 · அலகு 1 · 21 வினா & விடை

Term 1
21 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 1) பாடப்புத்தகத்தின் "வரலாறு என்றால் என்ன?" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 21 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

வரலாறு என்றால் என்ன?

✅ விடை
கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு
2

வரலாறு என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

✅ விடை
"இஸ்டோரியா" எனும் கிரேக்கச் சொல்
3

"இஸ்டோரியா" என்பதன் பொருள் என்ன?

✅ விடை
விசாரிப்பதன் மூலம் கற்றல்
4

நாணவியல் என்பது என்ன?

✅ விடை
நாணயத்தின் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை
5

பண்டைய மனிதர்கள் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உருவாக்கியவை என கருதப்படுவது எது?

✅ விடை
பாறை ஓவியங்கள்
6

கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம் எது?

✅ விடை
வரலாற்றுக்கு முந்தைய காலம்
7

எந்த காலத்தைச் சார்ந்த,எழுதப்பட்ட பதிவுகள் புரிந்துகொள்ள இயலாதவைகளாக உள்ளன?

✅ விடை
வரலாற்று தொடக்க காலம்
8

தம்மா என்பது எம்மொழிச் சொல்?

✅ விடை
பிராகிருதம்
9

தம்மா என்பதன் பொருள் என்ன?

✅ விடை
(சமஸ்கிருதத்தில் தர்மா) அறநெறி
10

யார் பதிவு செய்திருக்காவிட்டால், அசோகரின் வரலாறு மறக்கப்பட்ட வரலாறாகவே இருந்திருக்கும்?

✅ விடை
சார்லஸ் ஆலன்
11

பழங்கால மனிதர்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?

✅ விடை
நாய்
12

யாருடைய ஆட்சிக் காலத்தின் போது புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது?

✅ விடை
அசோகர்
13

எந்த போருக்குப்பின் அசோகர் போர் தொடுப்பதை கைவிட்டார்?

✅ விடை
கலிங்கப்போர்
14

அசோகர் கலிங்கப் போருக்குப் பின் எந்த மதத்தை பின்பற்றினார்?

✅ விடை
புத்த மதம்
15

வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்?

✅ விடை
அசோகர்
16

உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை அமைத்தவர் யார்

✅ விடை
அசோகர்
17

தேசிய கொடியில் உள்ள 24 ஆரக்கால்கள் எங்கிருந்து பெறப்பட்டது?

✅ விடை
சாரநாத் கல்தூண்
18

சாரநாத் கற்றூணை நிறுவியவர் யார்?

✅ விடை
அசோகர்
19

அசோகரின் சிறப்புகளை வெளிக்கொண்டுவர யாருடைய ஆய்வுகள் பயன்பட்டன?

✅ விடை
வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்
20

அசோகர் பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்டவர் யார்?

✅ விடை
சார்லஸ் ஆலன்
21

அசோகர் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூலின் பெயர் ?

✅ விடை
The Search for the India's Lost Emperor

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 1 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ