🏺 கலையரசன் ரா · அலகு 3

குடிதலைமையிலிருந்து பேரரசு வரை

Term 2 · அலகு 3 · 143 வினா & விடை

Term 2
143 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "குடிதலைமையிலிருந்து பேரரசு வரை" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 143 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

புதிய பிராந்திய அரசுகள் எந்த நூற்றாண்டில் தோன்றின?

✅ விடை
கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில்
2

எதன் விளைவாக கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன?

✅ விடை
புதிய பிராந்திய அரசுகளின் தோற்றத்தால்
3

இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கும், புது எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் யார்?

✅ விடை
மகாவீரரும் கௌதம புத்தரும்
4

சமூக மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்த உலோகம் எது?

✅ விடை
இரும்பு
5

கங்கைச் சமவெளியில் வேளாண் உற்பத்தி எதன் காரணமாக அதிகரித்தது?

✅ விடை
வளமான மண், இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு
6

மற்றைய மகாஜனபதங்களைவிட மகதம் எழுச்சி பெற முக்கிய காரணம் என்ன?

✅ விடை
இரும்பைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம்
7

"கணா" என்னும் சொல்லின் பொருள் என்ன?

✅ விடை
சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
8

சங்கா என்றால் என்ன?

✅ விடை
மன்றம்
9

கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் யாரால் ஆளப்பட்டது?

✅ விடை
மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால்
10

கண சங்கங்கள் எத்தகைய மரபுகளைப் பின்பற்றின?

✅ விடை
சமத்துவ மரபுகளை
11

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகை அரசுகள் செயல்பட்டன?

✅ விடை
இருவகைப்பட்ட அரசுகள்
12

சங்கங்கள் முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி.

13

மன்னராட்சி முறையில் அமைந்த அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

✅ விடை
முடியாட்சி அரசுகள்
14

ஜனபதங்கள் என்பது என்ன?

✅ விடை
மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்களே ஜனபதங்கள் ஆகும்
15

ஜனபதங்கள் மகாஜனபதங்களாக எவ்வாறு மாற்றம் பெற்றன?

✅ விடை
ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது. கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின. இதனால் ஜனபதங்கள் மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.
16

பதினாறு மகாஜனபதங்கள் ("பெரும் அரசுகள்") எவை?

✅ விடை
அங்கதம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், குரு, கோசலம், அவந்தி, சேதி, வத்சம், பாஞ்சாலம், மத்ஸ்யம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம்.
17

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?

✅ விடை
பதினாறு (16)
18

மகாஜனபதங்கள் தோன்றிய காலம் எத்தகையது?

✅ விடை
இது நாடோடி வாழ்க்கை முறையையும், இரத்த உறவுகளையும் அடிப்படையாகக்கொண்டிருந்த ஒரு சமூகம், வேளாண் சமூகமாக மாறத் தொடங்கின காலம் ஆகும்.
19

"முடியாட்சி" அரசு என்பது என்ன?

✅ விடை
ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும். முடியாட்சி முறை அரசில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும்போது அது அரச வம்சமாக மாறுகிறது. இந்த அரசுகள் வைதீக வேத மரபுகளைப் பின்பற்றின.
20

நான்கு முக்கிய மகாஜனபதங்கள் எவை?

✅ விடை
மகதம் - பீகார், அவந்தி - உஜ்ஜைனி, கோசலம் - கிழக்கு உத்திரப்பிரதேசம், வத்சம் - கோசாம்பி, அலகாபாத்
21

மகதம் எங்கு அமைந்திருந்தது?

✅ விடை
கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில்
22

மகதம் எழுச்சி பெற காரணம் என்ன?

✅ விடை
1 வளம் மிகுந்த இந்தச் சமவெளி வேளாண் விளைச்சலை அதிகரித்தது. | 2 அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான மரங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கியது. | 3 அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு உதவியது. | 4 வணிக, வர்த்தக வளர்ச்சி மக்களை இடம்விட்டு இடம் சென்று கலை மற்றும் தொழில் மையங்களில் குடியேறச் செய்தது.
23

பண்டைய மகதத்தினை ஆண்ட நான்கு அரச வம்சங்கள் எவை?

✅ விடை
ஹர்யங்கா வம்சம், சிசுநாக வம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம்
24

பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?

✅ விடை
ஹர்யங்கா வம்சம்
25

மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த யாருடைய காலத்தில் தொடங்கியது?

✅ விடை
பிம்பிசாரர்
26

படையெடுப்பு, திருமண உறவு ஆகிய வழிகளில் பிம்பிசாரர் எந்த பகுதிகளை தமது அரசுடன் இணைத்துக்கொண்டார்?

✅ விடை
லிச்சாவி, மதுரா மற்றும் கோசலம்
27

பிம்பிசாரரின் மகன் யார்?

✅ விடை
அஜாதசத்ரு
28

அஜாதசத்ரு யாருடைய சமகாலத்தவர்?

✅ விடை
புத்தர்
29

ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக்கூட்டியவர்?

✅ விடை
அஜாதசத்ரு
30

அஜாதசத்ருவின் வாரிசு யார்?

✅ விடை
உதயன்
31

பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?

✅ விடை
உதயன்
32

ஹர்யங்கா அரச வம்சத்தைத் தொடர்ந்து எந்த வம்சத்தினர் ஆட்சி பொறுப்பேற்றனர்?

✅ விடை
சிசுநாக வம்சம்
33

தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?

✅ விடை
காலசோகா (சிசுநாக வம்சம்)
34

இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர்?

✅ விடை
காலசோகா
35

இந்தியாவில் முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்?

✅ விடை
நந்த வம்சம் (நந்தர்கள்)
36

முதல் நந்தவம்ச அரசர் யார்?

✅ விடை
மகாபத்ம நந்தர்
37

மகாபத்ம நந்தர்களின் மகன்கள் எத்தனை பேர்?

✅ விடை
எட்டு (8)
38

நவ நந்தர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
மகாபத்ம நந்தர் மற்றும் அவருடைய எட்டு மகன்களும்
39

நந்த வம்சத்தின் கடைசி அரசர்?

✅ விடை
தனநந்தர்
40

தனநந்தர் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?

✅ விடை
சந்திரகுப்த மௌரியர்
41

நாளந்தா எங்கு அமைந்திருந்தது?

✅ விடை
பண்டைய மகத நாட்டில்
42

நாளந்தாவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது எந்த அமைப்பு?

✅ விடை
யுனெஸ்கோ
43

நாளந்தா - என்பதன் பொருள் என்ன?

✅ விடை
நாளந்தா என்னும் சமஸ்கிருத சொல் நா + அலம் + தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது. இதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.
44

யாருடைய காலத்தில் நாளந்தா மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது?

✅ விடை
குப்த்தர்களின்
45

மௌரியப் பேரரசை அறிய உதவும் சான்றுகள்?

✅ விடை
தொல்லியல் சான்றுகள் - முத்திரை பதிக்கப்பட்ட நாணங்கள் | கல்வெட்டுகள் - அசோகரின் பேரணைகள், ஜூனாகத் கல்வெட்டு | மதச்சார்பற்ற இலக்கியங்கள் - கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சஷம், மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல் | மதம் சார்ந்த இலக்கியங்கள் - சமண, பௌத்த நூல்கள், புராணங்கள் | வெளிநாட்டுச் சான்றுகள் - தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா.
46

மெகஸ்தனிஸ் என்பவர் யார்?

✅ விடை
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவர்
47

மெகஸ்தனிஸ் யாருடைய அவையில் இருந்தார்?

✅ விடை
சந்திரகுப்த மௌரியர்
48

மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்?

✅ விடை
பதினான்கு (14)
49

மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?

✅ விடை
இண்டிகா
50

மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள எந்நூல் ஒரு முக்கியச் சான்றாகும்?

✅ விடை
இண்டிகா
51

இந்தியாவின் முதல் பேரரசு எது?

✅ விடை
மௌரியப் பேரரசு
52

மௌரியப் பேரரசு -ன் தலைநகர் எது?

✅ விடை
பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா)
53

மௌரியப் பேரரசு -ன் ஆட்சிக்காலம் என்ன?

✅ விடை
ஏறத்தாழ கி.மு. (பொ.ஆ.மு.) 322 முதல் 187 வரை
54

மௌரியப் பேரரசின் முக்கிய அரசர்கள் யார்?

✅ விடை
சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்.
55

பாடலிபுத்திரத்தில் எத்தனை நுழைவு வாயில்களும் எத்தனை கண்காணிப்புக் கோபுரங்களும் இருந்தன?

✅ விடை
64 நுழைவு வாயில்கள், 570 கண்காணிப்புக் கோபுரங்கள்
56

மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்?

✅ விடை
சந்திரகுப்த மௌரியர்
57

சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்து வந்த துறவி யார்?

✅ விடை
பத்ரபாகு எனும் சமணத்துறவி
58

சந்திரகுப்தர் எங்கு உயிர் துறந்தார்?

✅ விடை
சரவணபெலகொலாவில் (கர்நாடகா)
59

சந்திரகுப்தர் எவ்வாறு உயிர் துறந்தார்?

✅ விடை
சமணச் சடங்கான சல்லேகனா செய்து உயிர் துறந்தார்.
60

சல்லேகனா என்பது என்ன?

✅ விடை
உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல்
61

பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?

✅ விடை
சிம்ஹசேனா
62

சந்திரகுப்த மௌரியரின் மகன் யார்?

✅ விடை
பிந்துசாரர்
63

கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்?

✅ விடை
அமிர்தகதா
64

அமிர்தகதா என்பதன் பொருள் என்ன?

✅ விடை
எதிரிகளை அழிப்பவன்
65

எந்த அரசரின் ஆட்சியின்போது இந்தியாவின் பெரும்பகுதியில் மௌரிய அரசு பரவியது?

✅ விடை
பிந்துசாரர்
66

பிந்துசாரரின் மகன் யார்?

✅ விடை
அசோகர்
67

பிந்துசாரர் தனது மகன் அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?

✅ விடை
உஜ்ஜைனி
68

பிந்துசாருக்கு பின் மகதத்தை ஆண்டவர் யார்?

✅ விடை
அவரது மகன் அசோகர்
69

மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?

✅ விடை
அசோகர்
70

அசோகர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

✅ விடை
தேவனாம்பிரியர் (கடவுளுக்குப் பிரியமானவன்)
71

அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?

✅ விடை
கி.மு. (பொ.ஆ.மு.) 261
72

அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?

✅ விடை
கி.மு. (பொ.ஆ.மு.) 261
73

கலிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் தன்னுடைய எத்தனையாவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்?

✅ விடை
13வது
74

"அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்" என புகழ்ந்தவர் யார்?

✅ விடை
(வரலாற்றறிஞர்) H.G. வெல்ஸ்
75

சண்ட அசோகர் என்பதன் பொருள் என்ன?

✅ விடை
தீய அசோகர்
76

தம்ம அசோகர் என்பதன் பொருள் என்ன?

✅ விடை
நீதிமான் அசோகர்
77

எந்த போருக்குப் பின்னர் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்?

✅ விடை
கலிங்கப்போர்
78

தர்மாத்திரைகள் என்பது என்ன?

✅ விடை
தர்மத்தின் கொள்கையை மக்களுக்குப் பரப்புவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளுதல்
79

அசோகரின் எந்த கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது?

✅ விடை
இரண்டாம் தூண் கல்வெட்டு
80

அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டு எதனை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது?

✅ விடை
மனிதாபிமானத்தை
81

அசோகர் எவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?

✅ விடை
இரக்க உணர்வு, அறக் கொடை, தூய்மை, புனிதத்தன்மை, சுய கட்டுப்பாடு, உண்மையுடைமை, மூத்தோர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடத்தில் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொள்ளல்.
82

இந்தியாவின் தேசிய சின்னம் எது?

✅ விடை
நான்முகசிங்கம்
83

நான்முகசிங்கம் எங்கிருந்து பெறப்பட்டது?

✅ விடை
சிங்கமுகத் தூண் சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியிலிருந்து.
84

அசோகர் மகன், மகள் பெயர் என்ன?

✅ விடை
மகன் - மகிந்தா, மகள் - சங்கமித்ரா
85

அசோகர் தன்னுடைய மகனையும் மகளையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக எங்கு அனுப்பி வைத்தார்?

✅ விடை
இலங்கை
86

அசோகர் சமயப்பரப்பாளர்களை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்?

✅ விடை
மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.
87

அசோகர் நியமித்த புதிய அதிகாரிகளின் பெயர் என்ன?

✅ விடை
தர்ம மகாமாத்திரர்கள்
88

தர்ம-மகாமாத்திரர்களின் பணி என்ன?

✅ விடை
பேரரசு முழுவதிலும் பௌத்தத்தைப் பரப்புவது
89

மூன்றாம் பௌத்தம மாநாட்டை பாடலிபுத்திரத்தில் கூட்டியவர் யார்?

✅ விடை
அசோகர்
90

அசோகரின் பேராணைகள் மொத்தம் எத்தனை?

✅ விடை
33
91

அசோகரின் பேராணைகள் எதில் பொறிக்கப்பட்டுள்ளன?

✅ விடை
தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும்
92

அசோகரின் பேராணைகள் எதனை விவரிக்கின்றன?

✅ விடை
அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்களின் நலன்மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் விவரிக்கின்றன.
93

பேராணை என்பது என்ன?

✅ விடை
அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.
94

சாஞ்சியில் காணப்படும் கல்வெட்டுகளில் எழுத்துமுறை என்ன?

✅ விடை
பிராமி
95

காந்தகாரில் காணப்படும் கல்வெட்டுகளில் எழுத்துமுறை என்ன?

✅ விடை
கிரேக்கம் மற்றும் அராமிக்
96

வடமேற்குப் பகுதிகள் அசோகர் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துமுறை என்ன?

✅ விடை
கரோஸ்தி
97

அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் யாரைப் பற்றி குறிப்பிடுகின்றன?

✅ விடை
மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரளபுத்திரர் ஆகியோரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.
98

மௌரியப் பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் யார்?

✅ விடை
அரசர்
99

அரசருக்கு உதவிய அமைச்சரவையின் பெயர் என்ன?

✅ விடை
மந்திரிபரிஷத்
100

மந்திரிபரிஷத் என்பதன் உறுப்பினர்கள் யார்?

✅ விடை
ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகா மந்திரி மற்றும் இளவரசனைக் கொண்டதாகும்.
101

வருவாய் முறையில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது?

✅ விடை
நில வருவாய்
102

லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டும் குறிப்பிடும் வரிகள் என்ன?

✅ விடை
பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளைக் குறிப்பிடுகின்றது.
103

நிலவரி எவ்வளவு வசூல் செய்யப்பட்டது?

✅ விடை
மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவரியாக வசூல் செய்யப்பட்டது.
104

அரசுக்கு கூடுதல் வருவாய் எதன் மூலம் கிடைத்தது?

✅ விடை
காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள்
105

அரசு வருவாயில் பெரும்பகுதி எதற்காக செலவிடப்பட்டது?

✅ விடை
இராணுவத்திற்கான ஊதியம், அரசு அதிகாரிகளுக்கான ஊதியம், அறக் கட்டளைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப்பணிகள் ஆகியவற்றிற்காகச் செலவிடப்பட்டது.
106

நீதித்துறையின் தலைவர் யார்?

✅ விடை
அரசர் (அவரே மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஆவார்.)
107

முப்படைகளின் தளபதி யார்?

✅ விடை
அரசர்
108

இராணுவ நிர்வாகம் எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன?

✅ விடை
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. (30 உறுப்பினர்கள்)
109

இராணுவ நிர்வாகத்தில் இருந்த படைகள் எவை?

✅ விடை
1.கடற்படை, 2. ஆயுதங்கள், போக்குவரத்து மற்றும் விநியோகம், 3. காலாட்படை, 4. குதிரைப்படை, 5. தேர்ப்படை, 6. யானைப்படை
110

நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக எத்தனை குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தது?

✅ விடை
5 உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. (30 உறுப்பினர்கள்)
111

நகரம் நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழிருந்தது?

✅ விடை
நகரிகா
112

நகரிகா என்னும் நகர நிர்வாக அதிகாரிக்கு உதவி செய்தவர்கள் யார்?

✅ விடை
ஸ்தனிகா, கோபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.
113

சுதர்சனா எனும் ஏரி உருவாக்கப்பட்டதை எந்த கல்வெட்டு பதிவு செய்துள்ளது?

✅ விடை
ருத்ரதாமனின் ஜுனாகத் / கிர்னார் கல்வெட்டு
114

சுதர்சனா ஏரியின் பணிகள் யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது?

✅ விடை
சந்திரகுப்த மௌரியர்
115

சுதர்சனா ஏரியின் பணிகள் யாருடைய காலத்தில் நிறைவு பெற்றது?

✅ விடை
அசோகர்
116

மௌரியர்கள் காலத்தில் அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை எவ்வாறு வழங்கியது?

✅ விடை
பணமாகவே
117

வெள்ளி நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் எவை?

✅ விடை
மயில், மலை மற்றும் பிறைச்சந்திர வடிவம்
118

மாஸாகாஸ் என்பது என்ன?

✅ விடை
செப்பு நாணயங்கள்
119

மௌரியர்கள் காலத்தில் எந்த நாட்டுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது?

✅ விடை
கிரேக்கம் (ஹெலனிக்) மலேயா, இலங்கை, பர்மா
120

சிறப்பு மிக்க துணிகள் எங்கெங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது?

✅ விடை
காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபா (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை
121

மௌரிய காலத்தில் முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் எவை?

✅ விடை
ஏற்றுமதி - நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரங்கள், பருத்தி இழை துணி, தந்தத்தினாலான பொருட்கள், சங்குகள், சிப்பிகள் | இறக்குமதி - குதிரைகள், தங்கம், கண்ணாடிப் பொருட்கள், பட்டு (லினன்)
122

மௌரிய கலையும் கட்டடக்கலையும்

✅ விடை
மௌரிய கலையும் கட்டடக்கலையும்
123

மௌரிய கால கலையை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

✅ விடை
இரண்டு (2) 1. உள்ளூர்க் கலை (யக்ஷன், யக்ஷி உருவச் சிலைகள்), 2.அரச கலைகள் (அரண்மனைகள் மற்றும் பொது கட்டடங்கள், ஒற்றைக்கல் தூண்கள், பாறை குடைவரைக்கட்டடக்கலை, ஸ்தூபிகள்.)
124

யக்ஷன் என்ன வகையான கடவுள்?

✅ விடை
நீதி, வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார்.
125

யக்ஷி என்பது எதனோடு தொடர்புடையது?

✅ விடை
யக்ஷாவின் பெண்வடிவாகும்.
126

ஸ்தூபி என்பது என்ன?

✅ விடை
செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்புஆகும்.
127

ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தவை எவை?

✅ விடை
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள்
128

சாஞ்சி ஸ்தூபி எங்குள்ளது?

✅ விடை
மத்தியபிரதேச மாநிலத் தலைநகர் போபாலுக்கு அருகே உள்ளது.
129

தர்மச்சக்கரம் எங்கு இடம் பெற்றுள்ளது?

✅ விடை
சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தூணின் சிகரப்பகுதியில் தர்மச்சக்கரம் இடம் பெற்றுள்ளது.
130

பாறைக் குடைவரை கலையின் தொடக்கம்

✅ விடை
நாகார்ஜுனா பாராபர் குன்றுகளிலுள்ள பாறை குடைவரைக் குகைக் கோவில்கள் புத்தவாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன.
131

பாராபர் குன்றிலுள்ள கல்வெட்டுகள் யார் குறித்தவை?

✅ விடை
பாராபர் குன்றிலுள்ள மூன்று குகைகளில் அசோகருடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன.
132

நாகார்ஜுன கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன?

✅ விடை
தசரத மௌரியர் (அசோகரின் பேரன்)
133

லோமாஸ் ரிஷி குகை எங்குள்ளது?

✅ விடை
பாராபர்
134

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்?

✅ விடை
அசோகருக்குப் பின்வந்த அரசர்கள் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தனர். பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள். பாக்ட்ரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.
135

அசோகருக்குப் பின்வந்த அரசர்கள் எவ்வாறு இருந்தனர்?

✅ விடை
மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
136

பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து எவை நடைபெற்றன?

✅ விடை
கலகங்கள்
137

யாருடைய படையெடுப்பு மௌரியப் பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது?

✅ விடை
பாக்ட்ரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு
138

மௌரியப் பேரரசின் கடைசி அரசர் யார்?

✅ விடை
பிருகத்ரதா - அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.
139

ராஜகிரகத்தின் தற்போதைய பெயர் என்ன?

✅ விடை
ராஜ்கிர்
140

பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் என்ன?

✅ விடை
பாட்னா
141

கலிங்காவின் தற்போதைய பெயர் என்ன?

✅ விடை
ஒடிசா
142

சீனப்பெருஞ்சுவரை எந்த பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார்?

✅ விடை
குன்-சி - ஹுங்
143

ஜியஸ் (zeus) கோயில் எங்கு உள்ளது?

✅ விடை
கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 2 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ